சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்துக்கு இழப்பீடு வழங்கத் தயார் – ஈரான்

ஜனவரி மாதம் உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியமைக்கு இழப்பீடு வழங்க தெஹ்ரான் ஒப்புக் கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மொசவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்திற்கு தெஹ்ரான் பொறுப்புணர்வை ஏற்றுக்கொண்டுள்ளதை மீண்டும் நினைவுபடுத்திய அவர், விமானத்தில் பயணித்த பல பயணிகள் ஈரானியர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இதற்கு இழப்பீடு வழங்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும் இதற்கு சில கால அவகாசம் தேவையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் 03 ஆம் திகதி அதிகாலை பாக்தாத் அருகே அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிக காவல்படை (IRGC) தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக ஈரானின் அமெரிக்க தளங்களுக்கு எதிராக ஈரான் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்த காலப் பகுதியிலேயே உக்ரைன் விமானம் எதிர்பாராத விதமாக ஈரானிய படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

தெஹ்ரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விமானம் ஜனவரி 8 ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இதன் விளைவாக விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஈரானிய இராணுவம் தற்செயலாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *