யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி

இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 160 பேருக்கான Covid-19 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் தற்காலிகமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இம் மாதம் மூன்றாம் திகதி கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்தின் நடத்துனருக்கு அன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறிப்பிட்ட பேருந்தில் அன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்ற தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணும் பணித்திருந்தார். அவர் பயணித்த சில நாட்களின் பின்னர் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போதுவரை விசேட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதேசமயம் குறிப்பிட்ட பேருந்தில் பயணித்த மேலும் பலருக்கு பரிசோதனை மேற்கொண்ட போதும் அவர்களில் தொற்று இல்லை என கடந்த சில நாட்களில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *