மரங்களை கட்டியணைத்து தனிமையைப் போக்கும் இஸ்ரேலியர்கள்

கொரோனா தாக்கத்தால், உற்றார் உறவினர்களை ஆறத்தழுவி அணைக்க முடியாமல் அவதியுறும் இஸ்ரேலியர்கள், மரங்களை கட்டியணைத்து தனிமையை போக்கி வருகின்றனர்.

இஸ்ரேலில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முதியவர்களுடன் தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் கடைபிடிக்கும் படி இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதையடுத்து, சுற்றத்தாரால் தனித்து விடப்பட்டதாக உணர்பவர்கள், மரங்களிடம் அன்பை செலுத்துமாறு Apollonia தேசிய பூங்கா ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதன் விளைவால், அனைத்து வயதினரும் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *