சுகாதார பாதுகாப்புடன் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த பரீட்சைகள் இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர்.

உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *