உலகக்கிண்ண சர்ச்சை! மீண்டும் கொந்தளித்த மஹேல ஜெயவர்தன

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“விளையாட்டரங்கில் விளையாடும் 11 பேரை தவிர்த்து வெளி நபரினால் போட்டி எவ்வாறு பணத்திற்கு விற்கப்படும் என்பது புரியவில்லை” என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பணத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் இதனை தான் பொறுப்புடன் கூறுவதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டிருந்தார்.

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்க முடியும் எனவும் சிலர் பணத்திற்காக இந்த போட்டியை காட்டிக்கொடுத்தனர் என தான் உணர்வதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார்.

“போட்டிக் காட்டிக்கொடுக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுமாறு கூறியுள்ள மஹேல ஜயவர்தன, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விடயம் தேர்தல் சர்க்கஸ்” எனவும் மஹேல முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த குற்றச்சாட்டை முழுதாக நிராகரிக்கும் இலங்கை கிரக்கெட் அணி வீரர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் மஹேல தமது ஆதங்கத்தை இரண்டாவது முறையாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *